கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைனில் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.