
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு திட்டங்கள் அனைத்தும் முன்னதாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மெட்ரோ ரயில் மற்றும் எலக்ட்ரிக் ட்ரெயின் என பொது போக்குவரத்துகள் பெரும்பாலான மக்களின் பயணம் முறையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு தானியங்கி பயண சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் மார்ச் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படும். இதற்காக பிரத்யேகமாக ஒரு கார்டு வடிவமைக்கப்பட உள்ளதாகவும் இதன் மூலமாக மெட்ரோ எலெக்ட்ரிக் ட்ரெயின் மற்றும் பேருந்து போன்ற அனைத்துக்கும் டிக்கெட் எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. பயணத்தின் போது இந்த கார்டை டாப் செய்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.