தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது மாநாட்டில் நடிகர் விஜய் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, இது ஓட்டுக்காக நடக்கும் மாநாடு கிடையாது.

மக்களோடு மக்களாக நாம் எப்படி இணைய போகிறோம் என்பதற்கான பயிற்சி பட்டறை. இதற்கு முன்பு இங்கு வந்து பலர் மக்களை பொய் சொல்லி ஏமாற்றி இருக்கலாம். ஆனால் இனி அது நடக்காது. பழைய கதைகளை சொல்லி நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாம் நம்பிக்கையோடு இருப்போம். மேலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்று கூறினார்.