
புதிய நம்பரிலிருந்து போன் செய்தவர்களுடைய பெயரை அறிவதற்கு சிறப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது. தற்போது தெரியாத எண்களிலிருந்து அழைப்பவர்களுடைய பெயரை அறிவதற்கு ட்ரு காலர் போன்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் .
இந்த நிலையில் ட்ரூ காலரை பயன்படுத்தாமல் அழைப்பவருடைய பெயரை அறியும் வசதியை TRAI இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த உள்ளது. நாடு முழுவதும் இந்த பெயர் விளக்க சேவையானது இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஷவ்மி போன்ற சில ஃபோன்களில் இந்த அம்சமானது ஏற்கனவே இருக்கிறது. இந்த நிலையில் TRAI அனைவருக்கும் கிடைக்க செய்ய உள்ளது.