
தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மை மொழி மாணவர்களும் இனி தமிழ் மொழி தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மொழி மாணவர்கள் இனி கட்டாயமாக தமிழ் மொழி தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.