
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதால் அந்த அறிக்கையை பரிசீலனை செய்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை பெற்றோர்களால் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க முடியாவிட்டால் மாணவர்களுக்கு தற்காலிகமாக சேர்க்கை வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பள்ளிகளுக்கான மானியத்தை திரும்ப பெறுவது அல்லது அங்கீகாரத்தை இலக்க செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.