தமிழகத்தில் ஒரு கட்டிடம் புதிதாக கட்டப்படுகிறது என்றால் அதற்கு கட்டிடம் நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம். அதாவது வரைபடத்தில் உள்ள அளவில் கட்டிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் அந்த விதிகளை அனைவரும் கடைப்பிடித்து வந்தனர். இருப்பினும் அந்த சான்றிதழை பெறுவதில் நிறைய இடர்பாடுகள் இருப்பதாக சமீப காலமாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சில குறிப்பிட கடிதங்களுக்கு மட்டும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இதிலிருந்து 14 மீட்டர் உயரம் கொண்ட 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள், 300 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் போன்றவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‌ இந்த கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு எந்த அளவில் கட்டிடங்கள் இருந்தாலும் அதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின் இணைப்பு வழங்கப்படும். மேலும் அதிலிருந்து தற்போது தளர்வு அளிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.