
ஆன்லைன் விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதில் பிரபல youtube அவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். பல்வேறு தலைப்புகளில் வீடியோ ரகங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அப்படியே ஸ்ட்ரீமிங் செய்கின்றனர். புயல் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நேரடி ஆன்லைன் விளையாட்டுகளை வெளியிட யூடியுப் முடிவு செய்துள்ளது. இளம் தலைமுறையினர் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுமோகத்தை அறுவடை செய்யும் நோக்கத்தில் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பல்வேறு விளையாட்டுகளை தங்கள் படைப்புகளை அங்கமாக சேர்த்துள்ளனர்.
அதன்படி தற்போது முதல் கட்டமாக யூடியூப் பிளேயபல்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டுக்கான தயாரிப்பை உருவாக்கி தன்னுடைய பணியாளர்களை அழைத்து விளையாட செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு அறிமுகம் குறித்த செய்தியை யூட்யூப் தற்போது வரை ரகசியமாக வைத்துள்ளது. இதனை நேரடியாக இணையதளம் மூலமாக அல்லது மொபைல் மூலமாக அனுப்பி விளையாடலாம். youtube தளத்தில் குறைந்து வரும் விளம்பர வருவாயை ஈடு செய்வதற்காக இந்த ஏற்பாட்டை யூடியூபில் தாய் நிறுவனமான கூகுள் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.