தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்துக்களை சேகரித்து வருகின்றனர். கோவை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் விவசாயிகள் தங்கள் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் தயாரிப்புகளுக்கு சரியான விலையை பெற முடியாமல் வருந்துகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு அரசு நியாய விலை கடை கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதன்படி பொதுமக்களின் கருத்துக்கள் திரட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கையை தயார் செய்து அதன் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கப்படும்.குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை குறித்த விருப்பங்களை ஆராயப்படும்.

இதைத்தொடர்ந்து பொது மக்களின் கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதி வரை படிவங்கள் நிரப்பப்பட்டு ஒரு அறிக்கையாக தொகுத்து அரசுக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். மேலும் இந்த ஆய்வுகளின் முடிவுகளை பெற்ற பிறகு அரசு இறுதி தீர்மானத்தை  அறிவிக்கும் எனவும் சிவில் சப்ளை அதிகாரி தெரிவித்தார்.