தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு சரியாக சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அரிசி பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக 24 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவதை தடுப்பதற்கு கியூ ஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த தற்போது தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள் மற்றும் பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழக அரசின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதை யாரும் வாங்க முடியாது என்றும் மூட்டைகளை விற்பனை செய்பவர்களின் விவரங்கள் தெரிய வந்தால் உடனே அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.