
டெல்லி மக்கள் “நவீன் பாய், நவீன் பாய்” என்று கோஷமிட்டநிலையில், பதிலுக்கு அவர் ஒரு அழகான சைகை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது..
2023 ஐபிஎல் போட்டியின் போது ஆர்.சி.பி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் இடையே மோதல் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும்.. நவீன் பேட்டிங் செய்தபோது, விராட் கோலி ஆக்ரோஷமாக பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே களத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் போட்டி முடிந்து இருவரும் கைகுலுக்கும் போதும் தொடர்ந்தது. அப்போது கம்பீர் உள்ளே வந்து கோலியுடன் சண்டை போடும் அளவிற்கு இந்த பிரச்சனை பெரிதானது. பின் கே எல் ராகுல் உள்ளிட்ட சக வீரர்கள் தலையிட்டு பிரச்சனையை சரி செய்தனர். ஆனால் இது அத்தோடு முடியவில்லை..
இருவரும் சமூக ஊடகங்களின் பதிவு மூலம் மறைமுகமாக குறி வைத்து தாக்கினர். அதே நேரத்தில் விராட் கோலி ரசிகர்களால் நவீன் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்று வரும் நிலையில், அவர் எந்த மைதானத்தில் காணப்பட்டாலும் விராட் கோலி ரசிகர்கள் அவரை கோலி, கோலி என்ற கோஷங்களை எழுப்பி கடுப்பேற்றி வந்தனர். இந்த சூழலில் 2023 உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த 11ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. அப்போது விராட் கோலிக்கும், நவீன் உல் ஹக்குக்கும் இடையே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்..

ஆனால் அன்று நடந்ததோ வேறு.. அன்று நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நவீன் பீல்டிங் செய்துகொண்டிருக்கும் போது, அவரை மீண்டும் கோலி என்ற கோஷத்தால் ரசிகர்கள் வெறுப்பேற்றினர். அப்போது பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி ரசிகர்களிடம் அப்படி செய்ய வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின் நவீன் நேராக விராட் கோலியிடம் சென்று பேச, இருவரும் இப்போது நட்பாக இப்போது மாறிவிட்டனர். விராட் கோலி – நவீன் இருவரும் ஒரே ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டு ஜாலியாக பேசினர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் 15ஆம் தேதி அதே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது நவீன் உல் ஹக் எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அவரை கோலி ரசிகர்கள் நவீன் பாய், நவீன் பாய் என்று கோஷங்களுடன் மனதார வரவேற்றனர். இதனால் நவீன் முகத்தில் ஒரு பிரகாச புன்னகை காணப்பட்டது. பின் நவீன் தனது கட்டைவிரல் சைகை மூலம் ரசிகர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்..
அன்று டெல்லி மைதானத்தில் கோலி என்று கூறி வெறுப்பேற்றிய நிலையில், பின் அதே மைதானத்தில் ரசிகர்கள் நவீன் பாய் என அழைத்து வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Delhi crowd chanting "Naveen Bhai, Naveen Bhai" and he showed a beautiful gesture in return.
– This is a huge impact of Kohli among cricket fans….!!!!https://t.co/F0Y1yuaa8i
— Johns. (@CricCrazyJohns) October 17, 2023