
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றது போல இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் மக்கள் எளிதில் முடித்து விடுகின்றனர். அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டதால் எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையில் whatsapp மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை எளிதில் டவுன்லோட் செய்யலாம். அதற்கு 9013151515 “My Gov”என்ற whatsapp உதவி என்னை உங்கள் போனில் பதிவு செய்து, HI என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அதில் வரும் மெசேஜில் DigiLocker services என்பதை கிளிக் செய்து டிஜி லாக்கர் அக்கவுண்ட் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் இல்லை என்று பதில் அளிக்க வேண்டும். உங்களிடம் டிஜிலாக்கர் இல்லை என்றால் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் மோடி பி பதிவிட்டு உங்கள் ஆவணங்களை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.