
பிரான்ஸ் நாட்டிலுள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்றானது பூமிக்கு மேல் பறந்தபடியே உணவருந்தும் அனுபவத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த ஹீலியம் கேப்ஸ்யூல் மூன்று மணி நேரம் வரை வானத்திலேயே மிதந்துவிட்டு பின்னர் பூமிக்கு திரும்பும். இதில் பயணம் செய்பவர்கள் பிரெஞ்ச் உணவுகளையும், அங்குள்ள மதுவையும் சுவைத்தபடியே பூமியின் அழகை வானத்தில் இருந்து கண்டு ரசிக்கலாம்.
இதில் ஒருமுறை பயணிக்க ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 2024 ஆம் வருடத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே இப்போதே தீர்ந்து விட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.