
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினத்திலும், பண்டிகை நாட்களிலும் வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ தன்னுடைய twitter பதிவில், வாடிக்கையாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே வங்கி சேவை பெறுவதற்கு என்ற எண்ணிற்கு 18001234 மற்றும் 18002100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை தொடர்பு கொள்வதன் மூலமாக வங்கியின் சிறப்பு வசதிகளை வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பெறலாம். இந்த எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு இருப்பையும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.