
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் பணியாற்று ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜெஸ்ஸி, அலுவலகத்தில் மற்ற ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நிறைய கற்றுக் கொள்வதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கும் சாத்தியத்தை வழங்கும் என கூறியுள்ளார்