Whatsapp நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் விதமாக அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வீடியோ கால் முறையை சற்று மேம்படுத்தும் விதமாக ஏகப்பட்ட அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. தற்போது வீடியோ காலில் இருக்கும் போதே பயனர்கள் ஏதேனும் ஆடியோவை நண்பர்களோடு ஷேர் செய்து மகிழலாம்.

தற்போது whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கு வீடியோ காலில் இருக்கும் போது ஆடியோவை ஷேர் செய்யும்படியான அப்டேட்டை பெற்று பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .அதாவது வீடியோ காலிலேயே புதிதாக ஆடியோ இணைக்கும் படிப்படியான ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்றும் நண்பர்கள் குழுக்களாக இணைந்து ஆடியோவை கேட்டு பயனடையலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.