
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம் பதிவு செய்யலாம் என ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் மூலம், முகத்தை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ளலாம்