பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சமீபகாலமாகவே உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலையானது வீசி வருகிறது. வெப்ப அலையின் காரணமாக தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்திய கூலித் தொழிலாளி ஒருவர் கூட மரணம் அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில், மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின் படி, தமிழகத்தில் வெப்ப அலையானது   பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்..எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வெப்ப அலையை தடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை இனி மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று  கூறியுள்ளார்.