அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியில் ஒரு முக்கிய நபராக செயல்படுகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து திமுகவை சேர்ந்த சூலூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேந்திரன்,ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை எஸ் பி வேலுமணி கூறியுள்ளார். அதற்காக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்று எஸ் பி வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

விசாரணையின் இறுதியில் நீதிபதி ரயிலில் நடந்துள்ள சம்பவம் வெளிவந்துள்ள நாளிதழ்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மனுதாரர், அந்த செய்தியைப் பற்றி பேசிய வேலுமணிக்கு எதிராக மட்டும் வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும் வேலுமணி கூட்டத்தில் பேசியதை நேரில் மனுதாரர் கேட்கவில்லை. எனவே அவர் நிவாரணம் கோர முடியாது என்று தீர்ப்பளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மனுதாரர் குறித்து வேலுமணி பேசக்கூடாது என நீதிபதி தடை விதித்தார்.