ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிய மாணவர்கள் காலையில் ஆசிரியர்களை பார்த்ததும் குட் மார்னிங், எனவோ மாலையில் குட் ஈவினிங் எனவோ சொல்லக்கூடாது என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் எப்போதும் ஜெய்ஹிந்த் மட்டுமே சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டின் ஒற்றுமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு முறையும் ஜெய்ஹிந்த் சொல்லும் போது மக்கள் மத்தியில் உத்வேகம் பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 78 ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு தேசிய கொடியை வாங்க விரும்பும் மக்களுக்கு அவர்களுடைய வீடுகளிலேயே தேசிய கொடியை கொண்டு சேர்க்க அஞ்சல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.