X தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிடும் புதிய அப்டேட்டால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஒருவரை துன்புறுத்தும் காட்சிகள் மற்றும் அனுமதி இன்றி வற்புறுத்தும் காட்சிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்றும் ஆபாசமான புகைப்படங்களை புரொஃபைல் பிக் ஆக வைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த பதிவுகளை பார்க்க முடியாது. இந்த புதிய அப்டேட் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபகாலமாக எலான் மஸ்க் X தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.