சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் நேரத்தை குறைத்து பயணத்தை விரைவாக வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் நீள வழிதடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு பதிலாக பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் சேவை பாதிப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தில் இந்த அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.