உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  Whatsapp பயனர்களுக்கு தனித்துவமான புதிய அப்டேட்களை அறிமுகம் செய்வது மெட்டா நிறுவனத்தின் வழக்கம்.

அந்த வகையில், முற்றிலும் பாதுகாப்பான வழியில் AI மூலம் ஸ்டிக்கர் ஜெனரேட் செய்யும் அம்சத்தை கொண்ட Al Boost Whatsapp வரவுள்ளது. தற்போது அதற்கான புதிய வெர்ஷனை Beta டெஸ்டர்கள் சோதனை செய்து வருவதாக அறியமுடிகிறது. இது பயனர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது