
பொதுவாக பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டும் இல்லையெனில் ஏடிஎம் செல்ல வேண்டும். அப்படி ஏடிஎம் செல்லும்போது ஏடிஎம் கார்டு இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். ஆனால் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஏடிஎம் மிஷினில் யுபிஐ மூலம் பணம் எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதாவது இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வட்ட நிலையில் தற்போது செல்போனில் உள்ள யுபிஐ மூலம் ஏடிஎம் மெஷினில் ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு 30 வினாடிகள் ஆகலாம். எனவே இதில் பணம் எடுக்கும் போது தாமதம் ஏற்பட்டால் யாரும் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஏடிஎம்மில் யுபிஐ பண பரிவர்த்தனை மூலமாக அதிகபட்சமாக ரூ.10,000 வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.