எஸ்பிஐ வங்கியானது அதன் வெளிப்புற பென்ச் மார்க் கடன் விகிதம் மற்றும் ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட்( RLLR) போன்றவற்ற குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன் மட்டுமல்லாமல் பல கடன் வாங்கியதற்கான வட்டியும் குறையும். இதனால் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு மாத இஎம்ஐ கட்டும் சுமையும் குறையும். ரிசர்வ் வங்கியானது சமீபத்தி ரெப்போ வட்டி வீதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. அதன் பிறகு தன SBI வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெளிப்புற பென்ச் மார்க் கடன் விகிதம் 9.15 சதவீதத்திலிருந்து8.90% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் தற்போது 8.75 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த கட்டணங்களோடு இணைக்கப்பட்ட கடன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த குறைப்பின் மூலமாக நேரடி பலனை பெற முடியும். வட்டி விகிதங்கள் குறைவதால் இஎம்ஐ குறைப்பு அல்லது கடன் கால அளவும் குறையும்.

இருப்பினும் விளிம்பு செலவு அடிப்படையிலான கடன் விகிதம், அடிப்படை விகிதம் மற்றும் பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட்  ஆகியவற்றில் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை  இந்த வட்டி விகித குறைபாடு ஸ்டேட் பேங்க் இந்தியாவில் வீட்டுக் கடனில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு அறிவிப்பாக மாறும் என்று கூறப்படுகிறது.