
மத்திய அரசு நடத்தி வரும் SSC தேர்வானது இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அவர், “இந்திய பணியாளர் தேர்வாணையம் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும்.
இந்திய பிராந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பிரதமரின் தலைமையில் 9 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என மத்திய அமைச்சர் ஜிதேந்திரர் சிங் தெரிவித்துள்ளார்.