Youtube நிறுவனமானது தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கையாக AdBlocker  பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை துண்டிக்க ஆரம்பித்துள்ளது. இதனால்  AdBlocker   பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இல்லாமல்  வீடியோக்களை பார்க்க முடியும். எனவே, ஆட் பிளாக் பயனர்கள் இனியாவது  யூடியூபின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி யூடியூப் செயலியை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆட்பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் முழுமையாக வீடியோக்களை பார்ப்பதற்கு  வழியின்றி யூடியூப் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.