
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதார் சைனி காலமானார். நவி மும்பை பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் மீது கால்டாக்சி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவர் இன்டெல் 386, 486 நுண்செயலிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார். இவரது மறைவுக்கு தொழிலதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்