
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் பொதுமக்களுக்கும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியதால் இனி அரிசிக்கு பதிலாக மக்கள் கோதுமையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் செல்கிறதா என்பதை உறுதி செய்ய சுயவிவரத்தை e-KYC மூலம் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் அப்டேட் செய்யுமாறு அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை 70 லட்சம் பேர் அப்டேட் செய்யவில்லை. அவர்கள் சுயவிவரத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் ரேஷன் அட்டைகள் ரத்தாகும் என கூறப்படுகிறது.