
வங்கிகளுக்கு ஒரு பொதுவாகவே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அதாவது எந்தெந்த மாநிலத்தில் பண்டிகையோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தமாக 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதி விடுமுறை முடிவடைந்த நிலையில் மீதமுள்ள விடுமுறை நாட்களை பார்க்கலாம்.
15 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
18 அக்டோபர் – கதி பிஹு பண்டிகை – அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா – குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
21 அக்டோபர் – துர்கா பூஜை – வங்கிகளுக்கு விடுமுறை
22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை