தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மே மாதம் தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அமைச்சர், அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்த இரண்டு நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய உள்ளதால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்காதவர்கள் உடனே சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.