
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 28, 2025 ஆகும்.
பணியிட விவரங்கள்:
Scientist ‘B’ – 22 இடங்கள் | சம்பளம்: ரூ.56,100 – 1,77,500 | தகுதி: சுற்றுச்சூழல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேதியியல், இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Law Officer – 1 இடம் | சம்பளம்: ரூ.44,900 – 1,42,400
தகுதி: சட்ட இளங்கலைப் பட்டம் மற்றும் 5 ஆண்டு அனுபவம்.
Senior Technical Supervisor – 2 இடங்கள் | சம்பளம்: ரூ.44,900 – 1,42,400
தகுதி: இன்ஸ்ட்ருமென்டேஷன்/மின்னணுவியல் இளங்கலைப் பட்டம் மற்றும் 3 ஆண்டு அனுபவம்.
Senior Scientific Assistant – 4 இடங்கள் | சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
தகுதி: அறிவியல் முதுகலைப் பட்டம் மற்றும் 2 ஆண்டு அனுபவம்.
Technical Supervisor – 5 இடங்கள் | சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷனில் பட்டம் மற்றும் 3 ஆண்டு அனுபவம்.
Assistant – 4 இடங்கள் | Accounts Assistant – 2 இடங்கள் | Junior Translator – 1 இடம் | Senior Draughtsman – 1 இடம் | Junior Technician – 2 இடங்கள் | Senior Laboratory Assistant – 2 இடங்கள் | Upper Division Clerk – 8 இடங்கள் | Data Entry Operator – 1 இடம் | Stenographer – 3 இடங்கள் | Junior Laboratory Assistant – 2 இடங்கள் | Lower Division Clerk – 5 இடங்கள் | Field Attendant – 1 இடம் | Multi Tasking Staff – 3 இடங்கள் ஆகியவற்றுக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணியனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்படுவார்கள். அனைத்து பணிகளுக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் பொருந்தும்.
தேர்வு முறை மற்றும் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக்கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணத்தில் விலக்குப் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.cpcb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 28.4.2025