தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்ட செயலாளர்களை  நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தேர்வு செய்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் கொடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் பதவியில் பெண்களுக்கும் குறிப்பிட்ட அளவு இடத்தை ஒதுக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு ஒன்றியம் மற்றும் வட்டார அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். நடிகர் விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மார்ச் மாதம் ஷூட்டிங் முடிவடைகிறது. இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் அதனை முன்னிட்டு மாபெரும் பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.