
அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேபி முனுசாமி பேசியதாவது, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கழகத் தொண்டர்களின் உழைப்பை மட்டும் தான் நம்பி இருக்கிறார். ஆனால் மு.க ஸ்டாலின் கூட்டணியை மட்டும் தான் முழுமையாக நம்பியுள்ளார். கூட்டணி கட்சிகள் எதிர் கருத்து கூறினால் அவர்களை உடனடியாக அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று திமுக கூறுகிறது.
தொண்டர்கள் மட்டும் கடுமையாக உழைத்தால் இன்னும் 5 அல்லது 6 மாதத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொள்வார்கள். ஏனெனில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கை எதிரணியில் உள்ளவர்களுக்கு வர வேண்டும். அந்த நம்பிக்கையை உருவாக்க நாம் உழைப்போம் என்று இந்த கூட்டத்தில் சூழுரைப்போம் என்றார்.