
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு இதை சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றும் இதனுடைய இறைச்சி சத்துமிக்குது என்றும் கூறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மாவட்ட வன அலுவலர் மகேந்திரா உத்தரவின் பேரில் அந்த கிராமத்திற்கு சென்று ராஜேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அதில் மூன்று நாட்களுக்கு முன்பாக பாம்பை கொன்று அதனை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வனவிலங்கை கொன்றது, அதனை சமைத்து வீடியோ எடுத்தது ஆகிய காரணத்திற்காக வனத்துறையினர் ராஜேஷ் குமாரை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வனவிலங்கை துன்புறுத்துதல், கொல்வது தண்டனைக்குரிய குற்றம் ராஜேஷ்குமார் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டுள்ளார். இது கடுமையான குற்றமாகும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.