
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடைபெற முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்தை விதிமுறைகளை மீறுவது தான். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏராளம். இதன் காரணமாக சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஆகஸ்ட் 1 முதல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அம்மாநில போக்குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் 90 சதவீதம் சாலை விபத்துக்கள் அதிவேகமாக பயணிப்பதால் நேரிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் புதிய விதி அமலுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் வேகவரம்பு 60 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது