
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஜூன் 1 இன்று முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
எரிவாயு சிலிண்டர் விலை:
மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வரும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70.50 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1840.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆதார் கார்டு:
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஆதார இலவசமாக புதுப்பிக்கலாம். அதன் பிறகு நீங்கள் ஆதாரில் மாற்றம் செய்தால் கட்டணம் செலுத்த நேரிடும்.
ஓட்டுனர் உரிமம்:
ஜூன் 1 முதல் ஓட்டுனர் உரிமத்தை பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்:
ஜூன் 1 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.