கடல் வளத்தை பாதுகாக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 14ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் 14 இன்றுடன் அதற்கான தடைக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் படகுகளை தயார் செய்து வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன் விலை குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.