
அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதாவது புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு இன்று ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதோடு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.