
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் இதனால் 100 கிலோ காற்று வீசும் எனவும் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.