
தங்க பத்திர விற்பனையின் அடுத்த தவணை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. RBI சார்பில் விற்பனை செய்யப்படும் இந்த பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. அதேசமயம் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி தருபவை. இந்த தவணைக்கான விற்பனை விலை கிராம் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 923 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி உண்டு. செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த பத்திரங்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.