
சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 10 இன்று திறக்கப்பட உள்ளது. நவம்பர் 11ஆம் தேதி சிறப்பு பூஜைக்கு பிறகு இரவு நடை சாத்தப்பட்ட நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படும். திருவிதாங்கூர் அரச குடும்ப கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராமவர்மா சமூக சீர்திருத்தங்களை செய்தவர். அவரது பிறந்த நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.