
அதிமுக கட்சியின் மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் நேற்று செல்லூர் ராஜு தலைமையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தனுஷ் மற்றும் நயன்தாரா சண்டைதான் தற்போது நாட்டுக்கு மிகவும் முக்கியமா.? இந்த பிரச்சனை திமுகவின் திசை திருப்பும் வேலை என்று கூறினார். அதன் பிறகு இன்று மாணவர்களுக்கு சாக்லேட் மாதிரி போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது என்று கூறிய அவர் சமூக நீதி என்று பேசும் திமுக அரசு சிறுபான்மையினருக்காக எதுவுமே செய்யவில்லை என்றார்.
விளம்பரம் செய்வதில் மட்டும் திமுக வேற லெவலில் இருக்கிறது. ஒரே ஒரு செங்கலை மட்டும் வைத்து உதயநிதி மக்களை ஏமாற்றிவிட்டார். வருகிற தேர்தலில் திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். மேலும் பெண்களுக்கு எதிராக செயல்படும் ஒரே ஒரு அரசு என்றால் அது திமுக மட்டும்தான். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர்கள் நிறுத்திவிட்டனர் என்று கூறினார்.