
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னபோது சீமான் அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நிலையில் சமீபத்தில் அவரை அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். அவருடைய சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் நோக்கத்தில் தான் ரஜினியை சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்
நடிகர் ரஜினியின் ஆதரவாளர் ஒருவர் சீமானை விமர்சித்து பேசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்தவர்கள் எல்லோரும் அவர் முன் கைகட்டி காலில் விழுந்து அடிபணிந்துள்ளனர். இதுதான் வரலாறு. இதற்கு சீமானும் விதிவிலக்கு கிடையாது. தற்போதைக்கு தமிழ்நாட்டில் வெட்கமே இல்லாமல் ரஜினிகாந்தின் காலில் விழக்கூடிய ஒரே ஆள் என்றால் அது சீமான் மட்டும் தான்.
விஜய் கிட்ட இருந்து எப்படியாவது என்னை காப்பாத்துங்க இல்லை எனில் விஜயிடம் சொல்லி என்னுடன் கூட்டணி அமைக்க சொல்லுங்கள் என்று ரஜினியின் காலில் விழுந்து கெஞ்சியதாக அவர் கூறியுள்ளார். அதோடு ரஜினியை அவர் பேசிய பேச்சுக்கு போயஸ் கார்டன் பக்கம் கூட விடக்கூடாது. சீமான் மானங்கெட்டு போய் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ரஜினியின் காலில் போய் தற்போது விழுந்து கெஞ்சியுள்ளார். இதற்கு பேசாமல் அவர் தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு விஜய் கட்சியில் சென்று இணைந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ஒரு பயனர் இந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு காலத்தில் இவன் கோமாளி என்றும் இவன் பேசுவது எல்லாம் பொய் என்றும் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று இவனுடைய இந்த காணொளியை தான் நாம் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறோம். நாளைக்கு இவன் விஜய் அண்ணனையும் கேவலமாக பேசுவான். மேலும் அதையும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே என்று TVK ஹேஷ் டேக்கை போட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் இவன் ஒரு கோமாளி என்று இவன் பேசுவது எல்லாம் பொய் என்று சொல்லிக்கிட்டு இருந்தோம் ஆனால் இன்று இவனுடைய இந்த காணொளியை தான் அதிகம் ஷேர் செய்து கொண்டிருக்கின்றோம் நாளைக்கே அவன் விஜய் அண்ணனே கேவலமாக பேசுவான் அதையும் ஷேர் செய்யுங்கள் #tvk தோழர்களே pic.twitter.com/M5FmWxlT9g
— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) November 26, 2024