இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிகள் இன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த நிலையில் ஒத்திகை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் கூடினர்.

இதைத்தொடர்ந்து இன்றும் பொதுமக்கள் விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மெரினாவிற்கு அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், விமானப்படை அதிகாரிகள் நேரில் காண இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையில் உள்ள 72 வகையான விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இன்று காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற இருக்கும் நிலையில் பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.