
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான மக்கள் வேலை செய்துகொண்டும் மற்றும் படித்து வருகிறார்கள். தனியாகவும் குடும்பமாகவும் வெளியூர்களில் வசித்து வரும் இவர்கள் வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், பண்டிகை நாட்கள் போன்ற முக்கிய நாட்களில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பேருந்து நிலையங்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
இதனை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழக அரசு கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதாலும் அடுத்து சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும் மக்கள் சொந்த ஊருக்கு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் இன்று 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.