
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உலகப் புகழ் பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. அதன்படி அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று மாட்டுப்பொங்கல் திருநாளில் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் ஏராளமான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் ஒரு மனமகிழ் மன்றத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் போது அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.