முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின் சிறப்பாக தமிழ்நாடு பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிஇந்த பதிவில் பார்க்கலாம்.

  • தமிழ்நாடு இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலம்.
  • தமிழகம் மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு தான் இரண்டாவது பெரிய பங்களிப்பாகும்.
  • தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனம் பரதநாட்டியம்.
  • தமிழகத்தில் 77 சதவீதம் ரப்பரும் 60 சதவீதம் தீக்குச்சிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனங்கள் கரகம், கோலாட்டம் மற்றும் மயிலாட்டம் ஆகும்.
  • தமிழகத்தில் காஞ்சிபுரம் தான் பரப்பளவில் பெரிய மாவட்டம்.
  • இந்திய அளவில் மரவள்ளி கிழங்கு, வாழைப்பழம், மஞ்சள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில்  தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.