
தாம்பரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு ஜூன் 22 இன்றுமுன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு 10.30 மணிக்கு, சூளூர்பேட்டைக்கு நள்ளிரவு 12.08:00 மணிக்கு, கூடு இருக்கு நள்ளிரவு 1.25 மணிக்கு, சம்பல்பூருக்கு மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.
அதனைப் போலவே மறு மார்க்கமாக சம்பல்பூரிலிருந்து ஜூன் 24ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு கூடுருக்கும், சூலூர் பேட்டைக்கு நள்ளிரவு 2.38 மணிக்கு, எழும்பூருக்கு அதிகாலை 4.15 மணிக்கு, தாம்பரத்திற்கு அதிகாலை ஐந்து மணிக்கு வந்தடையும். மேலும் இந்த ரயில் 13 பொது பெட்டிகள்,மூன்று இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.