திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி மூலமாக நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில் திமுக தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் வரை கொண்டு சேர்ப்பது தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அனைத்து திமுக அணி செயலாளர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.